தென் ஆப்ரிக்காவில் சோகம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்ஆப்ரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகர் அருகே நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ் மலை பகுதிகளுக்கு அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், தலைகுப்புற பஸ் கவிழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர் ஆவர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும்
-
இஸ்ரேல் பார்லியில் டிரம்ப் பேசும்போது எம்.பி.,க்கள் இடையூறு!
-
டிரம்ப் முயற்சிக்கும், நெதன்யாகு உறுதிக்கும் கிடைத்த கவுரவம்: பிரதமர் மோடி
-
ஓட்டுத் திருட்டு குறித்த ராகுல் குற்றச்சாட்டு: சிறப்பு புலனாய்வு குழு கோரிய மனு தள்ளுபடி
-
கரூர் சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையம், எஸ்.ஐ.டி., செயல்பாடு சஸ்பெண்ட்: சுப்ரீம் கோர்ட்
-
தூத்துக்குடி டூ சென்னை புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் விரிசல்; நடுவானில் திடீர் பரபரப்பு!
-
அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் போரில் வெற்றி: டிரம்ப் பேச்சு