அமைச்சர்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை: சென்னை ஐகோர்ட் வேதனை

சென்னை: '' அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை. மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் காட்டப்படுகிறது,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில், பல்வே று பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால், அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை. மற்றவர் வழக்கில் வந்தே பாரத் ரயில் போல் வேகம் காட்டப்படுகிறது எனக்கூறியதுடன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசின் அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது.






மேலும்
-
இஸ்ரேல் பார்லியில் டிரம்ப் பேசும்போது எம்.பி.,க்கள் இடையூறு!
-
டிரம்ப் முயற்சிக்கும், நெதன்யாகு உறுதிக்கும் கிடைத்த கவுரவம்: பிரதமர் மோடி
-
ஓட்டுத் திருட்டு குறித்த ராகுல் குற்றச்சாட்டு: சிறப்பு புலனாய்வு குழு கோரிய மனு தள்ளுபடி
-
கரூர் சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையம், எஸ்.ஐ.டி., செயல்பாடு சஸ்பெண்ட்: சுப்ரீம் கோர்ட்
-
தூத்துக்குடி டூ சென்னை புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் விரிசல்; நடுவானில் திடீர் பரபரப்பு!
-
அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் போரில் வெற்றி: டிரம்ப் பேச்சு