ஊராட்சியில் ரூ.3.71 கோடியில் வளர்ச்சி பணிகள்: விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஊட்டி:ஊராட்சிகளில், 3.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகொலா, இத்தலார், நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் மாநில அரசின் கனவு இல்லம் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டம் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 3.71 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 'நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, கன்னேரி மந்தனை அரசு பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பொருட்களின் இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

Advertisement