சாலையை கடந்த தொழிலாளி பைக் மோதி உயிரிழப்பு
சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் அருகே, சாலையைக் கடந்த தொழிலாளி, பைக் மோதி பலியானார்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு, 52; வீடுகளுக்கு 'டைல்ஸ்' ஒட்டும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், தெள்ளிமேடு பேருந்து நிறுத்தம் அருகில், பாலு சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, திருவள்ளூரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்ற 'யமஹா எம்.டி.,' பைக் வாகனம் மோதியது.
இதில் படுகாயமடைந்த பாலு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
'யமஹா எம்.டி.,' பைக்கில் வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவா, 24, என்பவர் காயமடைந்தார். அவரை, அங்கிருந்தோர் மீட்டு, அவசர கால 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், பாலு உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட 15 சிறப்பு ரயில்களும் 'ஹவுஸ் புல்'
-
புதுச்சேரி வளர்ச்சிக்கு பிரதமர் நிதி அமைச்சர் நமச்சிவாயம் பெருமிதம்
-
அரியாங்குப்பத்தில் தீபாவளி அங்காடி திறப்பு
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை ஆற்றில் தொடரும் வெள்ளம்
-
ஜி.ஹெச்.,ல் விழிப்புணர்வு
-
'நாளந்தா கோப்பை' விளையாட்டு போட்டி