ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி

புதுச்சேரி : பாண்டிச்சேரி ஆர்ட் அகாடமி சார்பில் 6 வது தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடந்தது.

புதுச்சேரி தமிழ் சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அகாடமி செயலாளர் ஸ்ரீதளாதேவி தலைமை தாங்கினார்.

கலை பண்பாட்டு துறையின் முன்னாள் இயக்குநர் கலியபெருமாள், முனுசாமி ஆகியோர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஓவிய கலைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

இதில், ஓவிய மாணவர்களை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளி மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பரிசு பெற்ற மாணவர்களின் ஓவியங்கள் கேட்லாக் புத்தகமாக வெளியிடப்பட்டது.

விழாவில், ஓவியர்கள் சுகுமாரன், அன்பழகன் வாழ்த்தி பேசினர். முன்னதாக. அகாடமி தலைவர் சேகர் வரவேற்றார். ஓவியர் கிறிஸ்டினா ரவி தொகுத்து வழங்கினார்.

Advertisement