உங்களின் உலக அமைதி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்; டிரம்பை மெச்சிய பில் கிளிண்டன்

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வரவேற்றுள்ளார். பிராந்தியத்தில் அமைதி நிலவ எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை என்றும் அவர் பாராட்டி இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்த 20 அம்ச திட்டத்தை ஒப்புக் கொண்டு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது. எகிப்தில் இது தொடர்பாக நடைபெற்ற அமைதிக்கான உச்சி மாநாட்டில், போர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
டிரம்பின் இந்த முயற்சியை உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் வரவேற்று உள்ளனர். இந் நிலையின் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்த போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
அக்.7ம் தேதி 2023 முதல் இஸ்ரேல் மீதான தாக்குதல் தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதை பார்ப்பதற்கும், அது பற்றி பேசுவதற்கும் மனது மிகவும் கடினமாக உள்ளது.
போர் நிறுத்தம் நடைமுறை, 20 பிணைக்கைதிகள் விடுவிப்பு, காசாவுக்கான உதவிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு நன்றி. அனைவரையும் ஈடுபாட்டுடன் வைத்திருந்த அதிபர் டிரம்ப், கத்தார் மற்றும் பிறநாட்டு தலைவர்கள் பாராட்டுக்களுக்கு தகுதியானவர்கள்.
எதிர்காலத்தை யோசித்து, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளின் ஆதரவுடன் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் மக்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் வகையில் நீடித்த அமைதிக்கான முயற்சியாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு பில் கிளிண்டன் கூறி உள்ளார்.
எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டன் திரும்பும் போது விமானத்தில் ஏறிய டிரம்பிடம், பில் கிளிண்டனின் வரவேற்பை நிருபர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், இது மிகவும் சிறந்த ஒன்று. அவர் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார்.
அவருடன்(பில் கிளிண்டன்) நான் நன்றாக பழகியிருக்கிறேன். என் நண்பர். எனது திருமணத்திற்கு வந்திருக்கிறார் என்றார்.


மேலும்
-
போதைபொருள் கட்டுப்பாடு ஏஜென்சி அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு
-
பீஹார் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜ
-
ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு
-
2 நாட்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
-
சில நாடுகள் சர்வதேச விதிகளை மீறுகின்றன: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி