கர்நாடகாவில் நக்சல் ஆயுத குவியலை கைப்பற்றிய பாதுகாப்புப் படை; பெரும் சதி திட்டம் முறியடிப்பு

பீஜாப்பூர்: கர்நாடகாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 51 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். இதன் மூலம் நடக்க இருந்த பெரும் சதித்திட்டத்தை அவர்கள் முறியடித்து உள்ளனர்.
பீஜாப்பூரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக இறங்கி வருகின்றனர். பல லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் இயக்கத்தினர் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில், வழக்கம் போல் பீஜாப்பூர் பகுதியில் நக்சல் ஒழிப்பு வேட்டையில் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் இறங்கினர். அங்குள்ள வனப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஏராளமான ஆயுதங்களை நக்சல்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.
51 கையெறி குண்டுகள், 100 பண்டல் அலுமினியம் வயர், 50 ஸ்டீல் பைப்புகள், 40 இரும்பு தகடுகள், 20 இரும்பு ஷீட்டுகள் போன்றவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இவை அனைத்தும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுவதாகும்.
இதுதவிர, அதிக சக்தி கொண்ட வெடிக்கும் திறன் கொண்ட வெடி குண்டுகள் பூமியில் புதைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் கூறுகையில், இவை அனைத்தும் தங்களை குறி வைத்தே வைக்கப்பட்டுள்ளது, படு தீவிரமாக ஆராய்ந்து அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளோம். கைப்பற்றப்பட்டவை பெரும் நாச வேலைக்கு பயன்படுத்த நக்சல்கள் திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறினர்.

மேலும்
-
போதைபொருள் கட்டுப்பாடு ஏஜென்சி அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு
-
பீஹார் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜ
-
ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு
-
2 நாட்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
-
சில நாடுகள் சர்வதேச விதிகளை மீறுகின்றன: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி