சவால்களின் சிறப்பு பெயர் 'தினமலர்' நாளிதழ்

தினசரி செய்தித்தாள் நடத்துவது என்பது அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் ஒரு மிகப்பெரும் சவால். அதிலும், பல்வேறு போட்டிகளுக்கு இடையே வெற்றிகரமாக, தனக்கென தனி பாணியில் தொடர்ந்து, 74 ஆண்டுகளைக் கடந்து செயலாற்றுவது என்பது அசாதாரணமான ஒரு காரியம். அதைச் சிறப்புறச் செய்து வருகிறது, 'தினமலர்' நாளிதழ். வாழ்த்துகள்!
எத்தனை நாளிதழ்களை வாங்கினாலும், முதலில் தேடிப்பிடித்து படிப்பது 'தினமலர்' இதழைத்தான். மக்கள் தேவைகளை, பிரச்னைகளைத் தேடி அறிந்து, அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று, ஆய்வுக் கட்டுரையைப்போல் சமர்ப்பிக்கும் செய்தி சேவையில், 'தினமலர் ஒரு சிறந்த காகித ஆளுமை!'
நடப்பு அரசியல் களத்தின் பின்புலத்தை எளிய உரைநடையில் மக்களே பேசும் வகையில் எடுத்துக்கூறும் டீக்கடை பெஞ்ச், மக்களின் இதயத்துடிப்பை எடுத்துக்காட்டும் கதம்பம்!
ஆன்மிக செய்திகளை, அது உள்ளூர் அல்லது மாநில சிறப்பு பெற்ற கோவில்கள் என்றாலும் அதுகுறித்த சிறப்பு வெளியீடுகள். ஒவ்வொரு ஆன்மாவிற்குமான இறைப்பணி! மும்மதக் கோட்பாடுகள் மட்டுமின்றி, அருட்தந்தை வேதாத்திரி மகிரிஷி போன்றோரின் அறப்பணிகள், உடல், மன மேம்பாட்டுக் கல்வி முறைகள் குறித்தும் மக்களுக்கு அறிவுறுத்துவது ஆன்மத் தேடலிற்கான நற்பணி!
கோயம்புத்துார், திருப்பூர் போன்ற தொழில்நகரங்களின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆய்வுக் கட்டுரைகள், வழிகாட்டுதல்கள், நேர்காணல்கள், தலையங்கம் போன்ற செய்திகள், நகர மேன்மைக்கான சிறந்த மேலாண்மை!
'வாரமலர், 'சிறுவர் மலர்' எனத் தனித்தனி தொகுப்புகளில் மிகைப்பு காட்டும் செய்திகளின் அணிவகுப்பு. அனைவரையும் ரசிக்க வைக்கும் எழுத்து நடை… சிலிர்ப்பு!
தனிநபர் ஆவர்த்தனங்கள். முகம் அறியா பா.கே.ப., அந்துமணி… ஜோல்னா பையன்… எனத் தனிவழியில் கலகலப்பான செய்தித் துணுக்கு அலங்கரிப்புகள் மலர்ச்சி!
ஓரிரு வரியுடன் வெளியாகும் 'கார்ட்டூன்' கருத்துகள்... சிந்திக்கத் துாண்டும் கட்டமைப்பு..! மக்களையே செய்தியாளர்களாக்கி, அவர்களின் அனைத்து கருத்துகளையும் பேச வைக்கும் அரட்டை அரங்கம்… அற்புதம்!
மாணவர்களின் நலன் நாடும், அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்விப்பணியிலும் தனி கவனம் செலுத்தும் அக்கறை... இளையோருக்கான பாதை!
இது மட்டுமல்ல, களப்பணிகளிலும் மக்களுக்கான சேவைகளை திறம்பட செய்து வருகிறது 'தினமலர்'. 'கல்வி வழிகாட்டி, 'வேலைவாய்ப்பு வழிகாட்டி' என மக்களை நேரடியாக சந்திக்கும் முயற்சிகள்…. மேம்பட்ட நிர்வாகத் திறன் செயல்பாடு! தொழில், தொழில்நுட்பம் என நடப்பு வர்த்தக நடைமுறைகளை எடுத்துக்கூறும் பாங்கு வரவேற்புக்குரியது.
மொத்தத்தில் தினசரி நாளிதழ்களில் அனைத்து வகையிலும் குறையொன்றும் இல்லாமல், 'உண்மையின் உரைகல்' எனும் கோட்பாட்டிற்கு ஏற்ப தொடர்ந்து சாதனைகளைப் படைத்திடும் 'தினமலர்' மேன்மேலும் வளர்ச்சி பெற்று முன்னேற, மனமார்ந்த வாழ்த்துகள்...!
வாழ்க வளமுடன்!
இப்படிக்கு,
பாலசுப்பிரமணியம்
தலைவர், பண்ணாரி அம்மன் குழுமம்
மேலும்
-
போதைபொருள் கட்டுப்பாடு ஏஜென்சி அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு
-
பீஹார் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜ
-
ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு
-
2 நாட்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
-
சில நாடுகள் சர்வதேச விதிகளை மீறுகின்றன: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி