நடிகர் விஜய் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட வேண்டும் கஸ்துாரி

சென்னை: ''நடிகர் விஜய், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான இலக்கை நோக்கித்தான் பயணிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., பிரமுகர் நடிகை கஸ்துாரி கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
கரூரில் நடிகர் விஜய் சென்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்து போனது துரதிருஷ்டவசமானது. அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. சம்பவம் நடந்த பின்பும், கரூர் மக்களும், நெரிசலில் சிக்கி பாதிப்படைந்தோர் குடும்பத்தினரும், விஜய் பக்கம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அவரோடு இருக்க வேண்டிய, த.வெ.க., நிர்வாகிகள், அப்படி இல்லை.
கரூர் மக்களுக்கு நம்பிக்கைக்குரியவராக, நடிகர் விஜய் தொடர்ந்து இருக்க வேண்டும்.
நடிகர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஒரு கூட்டணியை கட்டமைக்க முயல்கின்றனர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை.
அதனால், தன் தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சியை விட்டு விட்டு, இருக்கும் கூட்டணியில் தன்னை இனைத்துக் கொள்ள வேண்டும்.
ஆந்திராவில் அப்படித்தான் செய்தார் துணை முதல்வரான பவன் கல்யாண்; அதே பாணியில் விஜயும் செயல்பட வேண்டும். இப்போதைக்கு அவர் முன்னாள் இருக்கும் ஒரே சவால் - ஆட்சி மாற்றத்துக்கு வித்திட வேண்டும் என்பதுதான். அதை நோக்கிய பயணத்தைத்தான் அவர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மாலை உபரி நீர் திறப்பு
-
நாடு முழுவதும் தீபாவளி குதுாகலகமாக கொண்டாடப்பட்டது
-
இந்தியா - இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும்; பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
கல்வியில் சிறந்த அல்ல... சீரழிந்த தமிழகம்: அன்புமணி குற்றச்சாட்டு
-
இன்று 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்; அதிக கனமழை பெய்ய வாய்ப்பு!
-
காலம் தந்த நன்கொடை 'தினமலர்' நாளிதழ்