இந்தியா - இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும்; பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

20

புதுடில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வாழ்த்துக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமரின் பிறந்த நாளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.


இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் அன்பு நண்பரே, உங்கள் (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு) தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்கள் பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தியா - இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: எனது நண்பர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்.


தீபத்திருநாள் உங்கள் சிறந்த தேசத்திற்கு நம்பிக்கை, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். இஸ்ரேலும் இந்தியாவும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.

Advertisement