செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு

3

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று( அக்.,21) வினாடிக்கு 100 கன அடி வீதம் உபரி தண்ணீர் திறக்கப்பட்டது.


சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இன்று மாலை 4:00 மணியளவில் ஏரியில் இருந்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

மொத்தம் 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.20 அடி நீர் உள்ளது. ஏரிக்கு 796 கன அடி நீர்வருகிறது. தண்ணீர் திறக்கப்பட உள்ளதை தொடர்ந்து குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், காவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement