பைக் மோதியதில் சிறுவன் படுகாயம்

ஆலந்துார்: சென்னை, ஆலந்துார், புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரி இவரது மகன் சஞ்சய், 13; எட்டாம் வகுப்பு மாணவர். இவர், நேற்று முன்தினம் தன் வீட்டின் முன் நின்று பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் வேகமாக வந்த பைக், அவர் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சிறுவனை, அங்கிருந்தோர் மீட்டு, கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மது போதையில் பைக் ஓட்டி வந்த நபரும் கீழே விழுந்ததால், அவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement