கனமழை எச்சரிக்கையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

கடலுார்:
கடலுார் முதுநகர் துறைமுகத்தில், புயல்,கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், நல்லவாடு, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம், சித்திரைப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடித்து வந்து கடலுார் முதுநகர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்கின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் 4,500க்கும் மேற்பட்டவை, கடலுார் முதுநகர் மற்றும் மீன்பிடி துறைமுக பகுதிகள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் கடலுார் முதுநகர் துறைமுகம் பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும்
-
ஜெர்மனியின் கார் பூங்கா
-
மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் ரூ.846 கோடி
-
உகாண்டாவில் கோர விபத்து : 46 பேர் உயிரிழப்பு
-
வெறி பிடிச்சுப்போய் கிடக்குது நீர்வளத்துறை: துரைமுருகனுடன் மோதுகிறார் செல்வப்பெருந்தகை
-
சாராய விற்பனையில் திமுக அரசு கவனம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
மக்களுடன் நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: உதயநிதி பேச்சு