சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தமிழ்ச்செல்வன், 27; இவர், சென்னையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 20ம் தேதி மாலை எதிர் வீட்டை சேர்ந்த தேசிங்கு, 56; என்பவருடன் பைக்கில் செஞ்சிக்கு வந்தார். வரும் வழியில் மழையினால் ஏற்பட்ட ஈரத்தில், பைக் வழுக்கி விழுந்ததில் இருவரும் காயம் அடைந்த இருவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் தமிழ்செல்வன் திடீரென தலை அதிகமாக வலிப்பதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது வழியில் அவர் இறந்தார்.
இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெர்மனியின் கார் பூங்கா
-
மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் ரூ.846 கோடி
-
உகாண்டாவில் கோர விபத்து : 46 பேர் உயிரிழப்பு
-
வெறி பிடிச்சுப்போய் கிடக்குது நீர்வளத்துறை: துரைமுருகனுடன் மோதுகிறார் செல்வப்பெருந்தகை
-
சாராய விற்பனையில் திமுக அரசு கவனம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
மக்களுடன் நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: உதயநிதி பேச்சு
Advertisement
Advertisement