ஆன்லைனில் வெள்ளி வளையல் ஆர்டர் பெண்ணிடம் ரூ.1.84 லட்சம் மோசடி
புதுச்சேரி: ஆன்லைனில் வெள்ளி வளையல் ஆர்டர் செய்து பெண் ஒருவர் மோசடி கும்பலிடம் ரூ. 1.84 லட்சம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, ஒயிட் டவுனையை சேர்ந்த பெண், ஆன்லைனில் வந்த கிவா நிறுவனத்தின் வெள்ளி வளையல் தயாரிப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, வளையல்களை ஆர்டர் செய்தார்.
இதையடுத்து, பெண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஆர்டர் செய்த வளையல்களுக்கு முன் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, இரண்டு தவணைகளாக ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 664 ரூபாய் மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், ஆர்டர் செய்த வெள்ளி வளையல் பார்சல் ஏதுவும் பெண்ணிற்கு வரவில்லை. மேலும், அந்த மர்மநபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், திருபுவனையை சேர்ந்த பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, துணி ஆர்டர் செய்து 4 ஆயிரத்து 697, காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் 25 ஆயிரம் என, 3 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 361 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெறாது: வானிலை மையம் தகவல்
-
இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி
-
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; மும்பையில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா ஆச்சரியம் அளிக்கிறது: அமெரிக்க பெண் சுற்றுலா பயணி வியப்பு: வீடியோ வைரல்
-
2 மாவட்டத்துக்கு அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
-
நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு; இபிஎஸ் குற்றச்சாட்டு