நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; மும்பையில் அவசர தரையிறக்கம்

2

மும்பை: மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகரத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மும்பைக்கே திரும்பியது.


,இதுபற்றிய விவரம் வருமாறு;

மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி அருகே நெவார்க் நகரத்துக்கு ஏர் இந்தியா விமானம் AI 191 இன்று (அக்.22) புறப்பட்டுச் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானிகள் குழு கண்டறிந்தனர்.

இதையடுத்து, ஏர் இந்தியா விமானம் உடனடியாக மீண்டும் மும்பைக்கே திருப்பி விடப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து பயணிகளிடம் தெரிவித்த விமான நிர்வாகம், அவர்கள் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்தது.

பின்னர், அவர்கள் வேறு விமானத்தில் நெவார்க் நகரத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தது. இதேபோல் நியூவர்க் நகரத்தில் மறு மார்க்கமாக மும்பை புறப்பட இருந்த விமானம் AI 144 ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement