2 மாவட்டத்துக்கு அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

1


சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும் 9 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை ஒட்டி நகர்ந்தது. அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.


பின்னர், வட தமிழகம், புதுச்சேரி வழியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கனமழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:


திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று (அக்., 22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இன்று மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* சேலம்,
* தர்மபுரி,
* கிருஷ்ணகிரி,
* திருப்பத்தூர்,
* திருவண்ணாமலை,
* வேலூர்,
* செங்கல்பட்டு
* சென்னை,
* காஞ்சிபுரம்

இன்று கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* விழுப்புரம்,
* கள்ளக்குறிச்சி,
* கடலூர்,
* பெரம்பலூர்,
* திருச்சி,
* ஈரோடு,

* கோவை,
* நீலகிரி,
* தேனி,
* தென்காசி,
* திருநெல்வேலி,
* கன்னியாகுமரி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மிக அதிக மழை!




புதுச்சேரியில் இன்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிக மழை இன்று பதிவாகியுள்ளது.
பெரியகாலாப்பட்டு - 248 மி.மீ.,
புதுச்சேரி டவுன் 207
பாகூர் - 192

Advertisement