நக்சல்களுக்கு தற்போதுள்ள ஒரே வாய்ப்பு!

மஹாராஷ்டிராவில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தளபதியான வேணுகோபால் ராவ், 60 ஆதரவாளர்களுடன் போலீசில் சரணடைந்துள்ளார். இவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்களை ஒப்படைத்து அவராகவே சரணடைந்திருப்பது நக்சல் இயக்கங்களின் சித்தாந்தம் மெல்ல உடைந்து வருவதாகவே பார்க்கப்படுகிறது.
கட்சிரோலி பகுதியில், நக்சல் இயக்கத்தின் கமாண்டராக 1984ல் இணைந்த வேணுகோபால், மஹாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சல் இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததில் பெரும் பங்காற்றியவர்.
கடந்த செப்., மாதம், அபய் என்ற பெயரில் நக்சல் இயக்கத்தினருக்கு வேணுகோபால் ஒரு ரகசிய கடிதம் எழுதியிருந்தார். கையேடு அளவில் 22 பக்கத்தில் அந்த கடிதம் இருந்தது. நாடு முழுதும் பரவி இருக்கும் நக்சல் இயக்கத்தை புரிந்துகொள்ளும் வகையில், அதை அவர் எழுதியிருந்தார்.
பின்னடைவு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, சமீபகாலங்களாகவே நக்சல் இயக்கம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதன் மூத்த தலைவர்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான தொண்டர்களை நக்சல் இயக்கம் இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அந்தக் கடிதத்தில், தங்கள் சித்தாந்தம் மெல்ல நீர்த்து வருகிறது என்பதை ராவ் நேரடியாக குறிப்பிடவில்லை. மாறாக நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் உயிரிழந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியை மிக ஆழமாக பதிவு செய்து இருந்தார்.
'மாற் றத்திற்கு நிச்சயம் ஆயுதம் ஏந்திய புரட்சி ஒத்துவராது. வன்முறைகளால் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்' என, தன் அனுபவங்களையும் அந்த கடிதத்தில் கொட்டியிருந் தார் வேணுகோபால்.
நீண்ட ஆண்டுகளாக நக்சல் இயக்கம் போராடி வந்தாலும், அதை ஒரு வலுவான இயக்கமாக தலைவர்களால் கட்டமைக்க முடியவில்லை. வன்முறை, ஆயுதம் ஏந்திய புரட்சி இயக்கமாகவே அதை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
அதன் விளைவுகள் தான் தற்போது மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு எதிராக திரும்பி இருக்கின்றன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா, பீஹார் என நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நக்சல்களை ஒடுக்கும் பணிகளில் அதிரடிப்படையின் கரம் ஓங்கி இருக்கிறது. தவிர, மக்களின் ஆதரவும் மத்திய அரசு அமைத்த அதிரடி படைக்கே இருக்கிறது.
இ தனால், இனியும் தாக்குபிடிக்க முடியாது என்ற முடிவுக்கு நக்சல் இயக்கத்தினர் வந்திருப்பதாகவே தோன்றுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான், நீண்ட ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய தளபதி வேணுகோபா ல் ராவ் சரணடைந்துள்ளார்.
அவரை பின்பற்றி, ஒட்டுமொத்த நக்சல் இயக்கத்தினரும் அரசிடம் சரண் அடைய வேண்டும்.
புதிய பாதை அப்போது தான் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுகளை மத்திய அரசு துவக்கும். இல்லையெனில், எதிர்காலத் தில் கூட அந்த வாய் ப்பு மங்கிவிடும்.
தற்போதைய சூழலில் சரணடைந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து புதிதாக அரசியல் கட்சி துவக்கி தேர்தலில் போட்டியிட ஒரு வாய்ப்பு இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு முன் அப்படி நடந்து இருக்கிறது. நக்சல் இயக்கத்தில் இருந்து திரும்பி, தேசிய நீரோட்டத்தில் பலர் இணைந்திருக்கின்றனர்.
அதற்கு மிகச்சிறந்த முன் உதாரணம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. முன்னொரு காலத்தில் நக்சல் இயக்கமாக இருந்தது.
பின், தேசிய நீரோட்டத்தில் இணைந்து இன்று லோக்சபாவுக்கு இரு எம்.பி.,க்களை அனுப்பி இருக்கிறது. பீஹார் சட்டசபையிலும், 12 எம்.எல்.ஏ.,க்க ளை வைத்திருக்கிறது.
என வே, நக்சல் இயக்கத்தினர் ஆயுதங்களை கைவிட்டு, அரசிடம் முழுமையாக சரணடைய வேண்டும். மத்திய, மாநில அரசுகளுடன் அரசியல் ரீதியாக பேச்சு நடத்துவதன் மூலம், தேசிய நீரோட்டத்தில் வெகு எளிதாக கலந்துவிட முடியும். அதுதான் வாழ்க்கைக்கான புதிய பாதையை திறந்துவிடும்.
- சிந்தனைக்களம் -
- டாக்டர் பி.வி.ரமணா
நக்சல் இயக்கங்களின் சர்வதேச நிபுணர்



மேலும்
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெறாது: வானிலை மையம் தகவல்
-
இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி
-
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; மும்பையில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா ஆச்சரியம் அளிக்கிறது: அமெரிக்க பெண் சுற்றுலா பயணி வியப்பு: வீடியோ வைரல்
-
2 மாவட்டத்துக்கு அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
-
நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு; இபிஎஸ் குற்றச்சாட்டு