ரூ. 2 லட்சம் மதிப்பு நகை, பணம் திருட்டு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்தவர் சிவா. தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 17ம் தேதி குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெர்மனியின் கார் பூங்கா
-
மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் ரூ.846 கோடி
-
உகாண்டாவில் கோர விபத்து : 46 பேர் உயிரிழப்பு
-
வெறி பிடிச்சுப்போய் கிடக்குது நீர்வளத்துறை: துரைமுருகனுடன் மோதுகிறார் செல்வப்பெருந்தகை
-
சாராய விற்பனையில் திமுக அரசு கவனம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
மக்களுடன் நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: உதயநிதி பேச்சு
Advertisement
Advertisement