மழையால் கோவில் கோபுரம் இடிந்தது

சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த பொயன ப்பாடியில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. சேலம், ஆத்துார், நாமக்கல், கடலுார், பெரம்பலுார் பகுதியை சேர்ந்த பலர் குடும்பத்தினர் குல தெய்வமாக வழிபடுகின்றனர். கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் க னமழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் செல்லியம்மன் கோவில் கோபுரம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது; வானிலை மையம் அறிவிப்பு
-
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.320 குறைவு
-
அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா புதிய எச்சரிக்கை
-
மலேசியாவில் ஆசியான் மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடு
-
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்
-
டில்லி என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement