ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ரபேல் போர் விமானத்தில் பறக்கிறார்!
புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (அக்., 29) அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரபேல் போர் விமானத்தில் பறக்கிறார்.
ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் இன்று (அக்., 29) ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்ய இருக்கிறார். பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூரின் போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர்.
இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் நாட்டுத் தலைவர் ஆனார்.
இப்படி பறப்பதில் என்ன பெருமை, வளர்ந்த நாடுகளில் இப்படி ஜனாதிபதிகள் பறந்து மக்கள் வரிப்பணம் வீணாகவில்லை,
வாழ்த்துகள்
Bravo Madam President
ஜனாதிபதியம்மா, அப்படியே எத்தனை இருக்கு, எத்தனை போச்சின்னு நைசா கணக்கு எடுத்து மக்களுக்கு சொல்லுங்கள்
வாழ்த்துக்கள் ப்ரெசிடெண்ட் மேடம்.மேலும்
-
தாய்லாந்தில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை; மத்திய அரசு விளக்கம்
-
இந்தியாவின் கடல்சார் துறை வேகமாக முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்
-
சுரங்கப்பாதை சாலை திட்டத்தை கைவிட்டு பொது போக்குவரத்து திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்: கர்நாடக துணை முதல்வருக்கு பாஜ எம்பி பதிலடி
-
கனமழையால் இந்தியா - ஆஸி., முதல் டி20 ஆட்டம் பாதியில் ரத்து
-
நவ.,5ல் சிறப்பு தவெக பொதுக்குழு கூட்டம்: விஜய் அறிவிப்பு
-
உள்ளாட்சித்துறையில் ரூ.800 கோடி முறைகேடு… ஊரை அடித்து உலையில் போடும் திமுக; இபிஎஸ் விமர்சனம்