அதிகார பேராசை, பொய் வாக்குறுதிகள்; இண்டி கூட்டணி தேர்தல் அறிக்கையை விளாசிய நிதிஷ்
பாட்னா: பொய்யான வாக்குறுதிகளை அளித்து பீஹார் இளைஞர்களை தேஜஸ்வி யாதவ் முட்டாளாக்குவதாக முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இளைஞர்களுக்கு அரசு வேலை, மகளிருக்கு உதவித்தொகை என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் பொய்யானவை, இளைஞர்களை முட்டாளாக்குபவை என்று முதல்வர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
மாநிலத்தை 15 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்கள் இப்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்த போது வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.
இப்போது, அதிகாரத்தின் மீது பேராசை இருக்கிறது. அதனால் தான் இதுபோன்ற ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். எங்களின் அரசானது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. யார் தங்களுக்கான வேலை செய்கிறார்கள் யார் பொய்களை சொல்கிறார்கள் என்பது பீஹார் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதை சொல்வது பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் இவர்
ஏன்? நீ குடுத்த தேர்தல் வாக்குறுதியெல்லாம் நிறவேத்தினாயா? 5 தடவையா முதல்வர் அதவில ஒட்டிக்கிட்டு இருக்கியே? எத்தனை தடவை மாறினாய் ஞாபகம் இருக்கா?
இந்திக்கூட்டணி இன்னும் கூட இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று இவர் சொல்லித்தான் தெரிகிறது.
லாலு பிரசாத் யாதவின் மாட்டு தீவன ஊழலையும் ,அராஜக ஆட்சியையும் பீகார் மக்கள் இன்னும் MARAKKAVILLAI.
உன் கதை முடியும் நேரமிது...
அதிகாரத்தின் மீது பேராசை இருந்ததால் தானே அந்தர்பல்டி அடிச்சி கூட்டணியை மாத்தி மாத்தி பதவியில் இருந்தே?
அதிகார பேராசை, பொய் வாக்குறுதிகள் - ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ 15 லட்சம் தொபுக்கடீர்ன்னு விழும்ன்னு சொன்னதையே நம்பினாங்க. ஒருவேளை இண்டியா கூட்டணிக்கும் ஒங்க கருப்புப்பணம் எங்க இருக்குன்னு தெரிஞ்சிருக்கும் போல. அத வெச்சி தருவாங்களோ?
எல்லா பெண்களுக்கும் ஆளுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். இது எப்படி இருக்கு
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, இந்தியாவில் எந்த மாநிலத்தில்லாவது நடைமுறைக்கு வந்துள்ளதா? மக்களே சிந்தித்து பாருங்கள். எல்லாம் ஆட்சியில் அமரவேண்டும் என்ற ஒரே குறிக்கோள்.மேலும்
-
தாய்லாந்தில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை; மத்திய அரசு விளக்கம்
-
இந்தியாவின் கடல்சார் துறை வேகமாக முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்
-
சுரங்கப்பாதை சாலை திட்டத்தை கைவிட்டு பொது போக்குவரத்து திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்: கர்நாடக துணை முதல்வருக்கு பாஜ எம்பி பதிலடி
-
கனமழையால் இந்தியா - ஆஸி., முதல் டி20 ஆட்டம் பாதியில் ரத்து
-
நவ.,5ல் சிறப்பு தவெக பொதுக்குழு கூட்டம்: விஜய் அறிவிப்பு
-
உள்ளாட்சித்துறையில் ரூ.800 கோடி முறைகேடு… ஊரை அடித்து உலையில் போடும் திமுக; இபிஎஸ் விமர்சனம்