ஜார்க்கண்டில் சோகம்; சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் பலி

10

ராஞ்சி: ஜார்க்கண்டில் வெவ்வேறு இடங்களில் சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் உயிரிழந்தனர்.


சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அந்தவகையில், ஜார்க்கண்ட் முழுவதும் சத் பூஜை கொண்டாட்டங்களின் போது 15 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.


பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் குளங்கள் மற்றும் ஆறுகளில் பிரார்த்தனை செய்யும் போது அல்லது குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் சிறுவர், சிறுமியரும் அடங்குவர்.

Advertisement