சிறுமியிடம் சில்மிஷம் கடைக்காரர் கைது
நன்மங்கலம்: நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் கனி, 45. இவர், மளிகை கடை நடத்தி வருகிறார். தாம்பரம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 11 வயது சிறுமியிடம், அவரின் தாய் கடைக்கு சென்று பால் பாகெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
ஆனால், கடைக்கு போக மறுத்த சிறுமி, அழுது கொண்டே, கடைக்கு சென்றால் கடைக்காரர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக, மேடவாக்கம் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, சிறுமியிடம் சில்மிஷம் செய்த கடைக்காரர் கனியை கைது செய்தனர். பின், சேலையூர் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆந்திராவில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
-
செங்கோட்டையன் வன்மம் வெளிப்பட்டு விட்டது: இபிஎஸ் காட்டம்
-
என்னை நீக்கியது வேதனை அளிக்கிறது; இபிஎஸ் செயல் சர்வாதிகாரப்போக்கு என செங்கோட்டையன் பேட்டி
-
சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை
-
குடும்பத்துக்காக இல்லை; மக்களுக்காக உழைத்தேன்: இன்னும் ஒரு வாய்ப்பு கேட்கிறார் நிதிஷ் குமார்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை
Advertisement
Advertisement