ஆந்திராவில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
அமராவதி: ஆந்திராவில் வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப்
பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரா சுவாமி கோவில்
உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலுக்கு தினமும்
ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் இன்று ஏகாதசி
பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள்
பங்கேற்றனர்.
அப்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த
நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து
நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்
தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
கூறியிருப்பதாவது: ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில்
ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர
சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது.
இறந்தவர்களின்
குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு
சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஏகாதசி சனிக்கிழமை இறப்பு
OM
Namo
Narayana
பக்தியும் இருக்கணும். அதே சமயம் பத்திரமாகவும் இருக்கணும்.
RIP. மக்கள் திருந்த வேண்டும். கடவுளை காண விரும்புகிறேன் என்ற வேகத்தில் தள்ளு முள்ளு, அடித்து கொண்டு முன்னேறுவது, வரிசையை கடை பிடிக்காமல் இருப்பது இதற்கு காரணம்.
சிபிஐ விசாரணை தேவை னு ஒருத்தனும் கூவ காணோம்
இதென்ன அரசியல் கூட்டமா சிபிஐ விசாரணைக்கு
பக்தர்கள் ஆன்மா சாந்தி அடைய ஆழ்ந்த இரங்கல்
தமிழகம் என்றால் அரசை குறை சொல்ல முடியும் அங்கே
முடியாது
அங்கே நடப்பது முன்னேற்ற அரசாங்கம். தமிழகத்தில் நடப்பது ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் ஊழல் அரசாங்கம்.
சந்திரபாபு குடும்பத்தில் எத்தனை பேர் அரசியலில் இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா இல்லை என்றால் தெரிந்து கொள்ளவும்
முருக்கா, தமிழகத்தைப் போல நாட்டை/ அரசியலை/பொதுவாழ்வை நாசம் செய்வது, வேறெங்கும் இல்லை.
அடிமைகள் புத்தி அவ்வளவு தான். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி. கள்ள சாராய மரணம் போன்றவை
நம் இந்துக்களுக்கு தான் இவ்வாறு அடிக்கடி நடக்கிறது. ஏனென்றால் நம்மிடம் வரிசையாக சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஒழுக்கம் இல்லை. எல்லாருக்கும் அவசரம்.
அணில் அண்ணன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது
பைத்தியக்காரனா நீ
இதுமாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் அரசும் தேவசம் போர்டும் சேர்ந்து செய்யவேண்டியது
காலத்தின் கட்டாயம். மக்கள் வழிமுறைகளை பின்பற்றி கூட்ட நெரிசலை தவிர்க்கவும்.
எங்கள் ஊரில் 41
முதல்வர் பொறுப்பா ?.