செங்கோட்டையன் வன்மம் வெளிப்பட்டு விட்டது: இபிஎஸ் காட்டம்
சேலம்: கொடநாட்டில் 2,3 கொலை நடந்துள்ளதாக பேசுகிறார் செங்கோட்டையன். அவரது பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டுவிட்டது. இவர்களை எல்லாம் கட்சியில் வைத்திருந்தால் எப்படி இருக்கும்? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது:
பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியை விட்டு நீக்கியவர்களோடு தொடர்பு வைத்திருந்தால் நீக்காமல் என்ன செய்வார்கள்? ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லும் செங்கோட்டையன், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? நான் முதல்வராக பின் தான் செங்கோட்டையனை அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் நியமித்தேன்.
அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர் செங்கோட்டையன். அதிமுகவிலிருந்து பிரிந்துசென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், செங்கோட்டையன் சொல்பவர்கள் எல்லாம் பிரிந்து சென்றவர்கள் இல்லை. கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.
டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். இவர் எல்லாம் அதிமுக பற்றி கருத்துக் கூற கூடாது.
வேடிக்கை பார்க்க...
அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதிமுகவைப் பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. செங்கோட்டையன் இதுவரை திமுக.,வை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவர் பி டீம் என்பது நிரூபணமாகியுள்ளது. 53 ஆண்டு இருந்தோம் என்று சொன்னால் மக்களுக்காக உழைத்து இருக்க வேண்டும். நிர்வாகிகளை அனுசரித்து சென்றால் உங்களை வாழ்த்து இருப்பார்கள்.
வன்மம்
இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்களுக்கு இந்த நிலை தான் கிடைக்கும். கொடநாடு பற்றி பேட்டி கொடுத்து இருக்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்த போது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கிறேன். 2,3 கொலை நடந்துள்ளது என்று சொல்கிறார். இத்தனை ஆண்டுகளாக செங்கோட்டையன் எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறார் பாருங்கள். இவரையெல்லாம் கட்சியில் வைத்திருந்தால் எப்படி இருக்கும்? இது எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இவர்கள் தனக்கு பதவி இல்லை என்றால் எந்த நிலைக்கும் போவார்கள்.
பீ டீம்
ஓபிஎஸ், அவரது மகன் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பேசுகிறார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்த பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள். 2026ம் தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம். 2016ல் ரத்தம் சிந்தி ஜெயலலிதா அதிமுக ஆட்சியை அமர்த்தி கொடுத்தார்கள். துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் தான் இன்றைக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
கட்சி நன்மைக்காக, வளர்ச்சிக்காக உடன் எடப்பாடி தலைமையில் இருந்து விலக வேண்டும்.
இவரையும் அக்கட்சி விரைவில் தேர்தலுக்கு பின்னால், தேர்தலில் தோற்றவுடன் வெளியேற்றும்.
சென்ற முறை சட்ட மன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட குஷ்பூ களப்பணி ஆற்றி வைத்திருந்த சேப்பாக்கம் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காமல் கொஞ்சம் கூட செல்வாக்கு இல்லாத பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கி திமுகவின் உதயநிதி வெற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தீர் பிரதிபலனாக எடப்பாடி தொகுதியில் ஏற்கனவே நிறுத்தியிருந்த திமுக வேட்பாளர் திரும்ப பெறப்பட்டு ஒரு டம்மி வேட்பாளர் நிறுத்தி உங்கள் வெற்றிக்கு ஏற்பாடு செய்தது திமுக. இப்படி ஆரம்பம் முதலே திமுகவுடன் டீலிங்கில் இருப்பவர் எடப்பாடி.
அருகில் அமர்ந்து இருக்கும் இன்னொரு சீனியர் செம்மலையை எப்போது நீக்க போகிறாய் எடப்பாடி?
இந்த பழனிசாமி மிகப் பெரிய துரோகி. ஜெயலலிதா, சசிகலா, பாஜக என எல்லோருக்கும் மக்களுக்கும் துரோகம் செய்தவர் செய்து கொண்ட இருப்பவர். சுடாலினை விட மோசமானவர். இந்த கேடு கெட்ட பழனிசாமியை தமிழக முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது. சிறையில் இருக்க வேண்டிய மனிதன். ஸ்டாலினின் A1 கைக்கூலி.
உங்க டீலிங் என்ன ஆட்சி மாரினலும் சரக்கு திமுக கட்சி காரன் ஃபேக்டரி லதான் வாங்கணும். அவ்வளவு தான்.
எடப்பாடி அதிமுகவை அழித்து விடுவார்.
பன்னீரை நீக்கி அவர் சார்ந்த சமுதாய ஓட்டுகளை இழந்தீங்க. ஏற்கனவே பலர் அதிமுகவை விட்டு போய் திமுகவில் கோலோச்சுகிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்து சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழக்கிறீர்கள். அண்ணாமலையை விலக்க வேண்டுமென பிடிவாதம் செய்து தமிழக பாஜகவையும் பலவீனப் படுத்தினீங்க. திமுக கூட்டணி ஒன்றுபட்டு இருக்கு. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை சைமனும் ஜோசப்பும் பிரித்து விடுகிறார்கள்.
ஆக, தொடர் தோல்விகளையே கொடுத்த நீங்க எப்படி அதிமுகவை ஜெயிக்க வைப்பீங்க? ஒரு வேளை, திமுக தோற்கனும் என்ற கோபத்தில் இந்த முறை மட்டும் தவெக உங்களுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி அடையும்.
உங்கள் மீதான கொடநாடு கொலை வழக்கினை ஸ்டாலின் ஏன் நடவடிக்கையை எடுக்கவில்லை? நீங்கள் ஆளும் திமுகவை எதிர்த்து எந்த வகையிலும் போராடாமல் அமைதி காக்க காரணம் என்ன? உங்களுக்குள் உள்ள டீலிங் என்ன? அதைத்தான் என்போன்றவர்களின் சந்தேகமே. அதிமுக என்கிற ஆலமரத்தை உங்களின் சுய நலத்துக்காக பலி கொடுப்பதை ஏற்க முடியாது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழி வகை செய்கின்ற உங்களை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்காது.
இன்றைய நிலையைப் பார்த்தால் ஏ டி எம் கே என் உள்கட்சி பூசல் மிகவும் வேதனை அளிக்கிறது பொதுமக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் திமுக அரசே அகற்ற வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அதிமுகவின் பலம் அதிகரிக்க வேண்டும்
பிரிந்து இருந்து திமுகவை அகற்ற முடியாது எடப்பாடி யார் தனியாக நின்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது சிரமம்மக்கள் தலைவர்களும் அதிமுகவிற்காக வேண்டி உழைத்திருக்கிறார்கள் பாடுபட்டு இருக்கிறார்கள் அவர்களை கேவலப்படுத்துவது மிகவும் வேதனையாக இருக்கிறது இந்த அரசியல் அதிமுகவிற்கு நன்மை பயக்காது
ஒரு எம்ஜிஆரின் ரசிகனாக அவரை எனது தலைவனாக 1972 இல் இருந்து தொடர்ந்தவனாக நான் நினைப்பதெல்லாம் அவர் உருவாக்கிய அதிமுக வளமுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அவரை மறந்து அவரது கொள்கைகளை காற்றில் பறக்க விட்டால் நிச்சயமாக அதிமுக வளராது
அவர் பெயரை மட்டும் கூறி போட்டு வாங்க முடியாது அவருடைய கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்
ஒரு குடும்பமாக இருந்தவர்கள் இன்று உடைந்து மாற்றானுக்கு உதவி செய்யக்கூடாது அதிமுக தோழர்கள் இதை நன்கு உணர்வார்கள்
மீண்டும் ஒரு தோல்வியை அதிமுக தாங்காது
இந்த ஆடுகோடி பழனிசாமியால் ஒண்ணுமே முடியாது.
எல்லாரையும் பகைத்துக் கொண்டாயிற்று. தலைவன் தகுதியும் இழந்தாயிற்று.