தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி
 
  புதுடில்லி: பாஜ தொண்டர்களின் ஊக்கமும், வைராக்கியமும் புது ஆற்றலை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, இம்மாநிலத்தில் பாஜ, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர ஓட்டு சேகரிப்பில் உள்ளனர். பீஹார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்நிலையில், பாஜ தொண்டர்கள் சிலரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மோடி கூறியுள்ளதாவது: பிரசாரத்திற்கு இடையே தொண்டர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அர்ப்பணிப்புள்ள தொண்டர்களை சந்தித்த இன்றைய அனுபவம் மிகவும் சிறப்பானது. அவர்களின் உற்சாகமும், வைராக்கியமும் ஒரு புதிய சக்தியை ஊட்டியுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-     
        கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க மத்திய அரசு திட்டம்
-     
          பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஒரு ஜோடி நுரையீரல், இதயம் பயணம்
-     
        பெங்.,கின் 5 மாநகராட்சிகளில் ரூ.1,241 கோடியில் அபிவிருத்தி பணிகள்
-     
          நடிகை உமாஸ்ரீக்கு 'டாக்டர் ராஜ்குமார் விருது'
-     
        முதியவரின் பெண்ணாசை ரூ.32 லட்சம் பறிகொடுப்பு
-     
        கன்னட ராஜ்யோத்சவா விருதுகள் அறிவிப்பு


 
  
  
 


