பெங்.,கின் 5 மாநகராட்சிகளில் ரூ.1,241 கோடியில் அபிவிருத்தி பணிகள்
  பெங்களூரு:  ஜி.பி.ஏ., கீழ் அமைக்கப்பட்டுள்ள, பெங்களூரின் ஐந்து மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 1,241 கோடி ரூபாய் ஒதுக்க, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
 முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி: 
 கடற்கரைகளின் மீள்தன்மை, பொருளாதார திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை சேவைக்கு 20.47 கோடி ரூபாய் ஒதுக்க நிர்வாக ஒப்புதல் கிடைத்துள்ளது. மாநிலத்தில் 2,200 அரசு பள்ளிகளில் கூடுதல் அறைகள் கட்டும் பொறுப்பு பொதுப்பணி துறைக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 கோலார் நகராட்சிக்கு உட்பட்ட அரபிகொத்தனுார் கிராமத்தில் 9 ஏக்கரில், தினமும் 150 டன் கழிவுகளை கையாளும் பயோ காஸ் அலகு அமைக்கப்படும். கழிவுகளை பதப்படுத்தும் பொறுப்பு, இந்திய எரிவாயு ஆணையத்திற்கு 25 ஆண்டு குத்தகைக்கு கொடுக்கப்படும். 
 'காவிரி ஐடி பிரிவு' மாண்டியாவின் விஸ்வேஸ்வரய்யா வேளாண் அறிவியல் பல்கலைக்கழக முதன்மை கட்டமைப்புக்கு 23.25 கோடி ரூபாய் ஒதுக்க நிர்வாக சீர்திருத்த துறை ஒப்புதல் கிடைத்து உள்ளது. கர்நாடக மாநில ஆயுதப்படைக்கு பணியாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு விதிகள் வரைவு ஆட்சேபனைகளை வரவேற்கும் அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் அதிகமாக இருந்தால், அரசு கவனம் செலுத்தும். 
 கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகள் கீழ் மென்பொருள் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக பதிவு மற்றும் முத்திரை துறையில் 'காவிரி ஐடி பிரிவு' என்ற தொழில்நுட்ப மேம்பாட்டு அலகு நிறுவப்படும். இதனை கவனிக்கும் பொறுப்பு, ஐந்து ஆண்டு குத்தகையில் தனியாருக்கு கொடுக்கப்படும். 
 புதிய வாகனங்கள் தென்மேற்கு பருவமழையின்போது கனமழை, ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை மறுகட்டமைக்க தேசிய பேரிடர் மீடபு நிதியின் கீழ் 1,543 கோடி ரூபாய் நிதி உதவி கோரி, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. 
 கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் தேர்ந்து எடுக்கப்பட்ட பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் பயனாளிகள் தோண்டும் ஆழ்துளை கிணறுக்கு, பம்ப்செட் வழங்கும் கான்ட்ராக்டர்கள் ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் துறைக்கு 34.95 கோடி ரூபாயில் செலவில் 241 புதிய வாகனங்கள் வாங்கப்படும். 
 உள் இடஒதுக்கீடு கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட, ஐந்து மாநகராட்சிகளில் வார்டு மேம்பாடு, உள்கட்டமைப்பு பணிகளுக்கு உள்கட்டமைப்பு மூலதன ஆதரவு திட்டத்தின் கீழ் 1,241 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் கிடைத்து இருக்கிறது. பெங்களூரின் பிரதான மற்றும் துணை பிரதான சாலைகளில் ஒயிட்டாப்பிங் பணிகள் மேற்கொள்ள, 1,055 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 
 ஸ்டார்ட் அப் கொள்கை - 2025 ன் கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எட்டு தொழில்நுட்ப வணிக இன்குபேட்டர்கள் அமைக்கப்படும். பெங்களூரு நகரின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைக்காக, டெர்ரா பர்மா பயோடெக்னாலஜிக்கு ஏக்கருக்கு 1.50 கோடி ரூபாய் நில இழப்பீடு வழங்கப்படும். 
 அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் எஸ்.சி., சமூகத்திற்கு உள்இடஒதுக்கீடு குறித்து விவாதம் நடத்தப்படும். பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த தேதி முடிவு செய்யப்படவில்லை. 
 இவ்வாறு அவர் கூறினார். 
மேலும்
-     
          அற்ப அரசியலை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-     
          'எங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?'; அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி மாணவி சரமாரி கேள்வி
-     
          "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
-     
          ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் கைது
-     
          அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு
-     
          இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய பிரிட்டன் மன்னர் சார்லஸ் உத்தரவு


 
  
  
 


