கன்னட ராஜ்யோத்சவா விருதுகள் அறிவிப்பு
  பெங்களூரு: கன்னட ராஜ்யோத்சவா எனும் கர்நாடக மாநில உதய தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 70 பேருக்கு, நாளை ரவீந்திர கலாசேதராவில் நடக்கும் விழாவில், ராஜ்யோத்சவா விருது வழங்கப்படுகிறது. 
 மொழி வாரியாக மாநிலங்களாக 1956ல் பிரிக்கப்பட்டது. நவ., 1ம் தேதி கர்நாடகா உதயமானது. 
 இதையடுத்து, 1966 முதல் கர்நாடகாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு, நவ., 1ம் தேதி 'ராஜ்யோத்சவா' விருது வழங்கப்பட்டு வருகிறது. 
 நடப்பாண்டு 59வது கன்னட ராஜ்யோத்சவா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, பெங்களூரில் கன்னடம், கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி நேற்று அளித்த பேட்டி: 
 நடப்பாண்டு கன்னட ராஜ்யோத்சவா விருதுக்கு, 2,116 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தகுதியான 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 மாவட்ட வாரியாக, சமூக மேற்பார்வையின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். கர்நாடக வரலாற்றில் முதன் முறையாக சமகர் ஹரலயா சமூகத்தை சேர்ந்த இருவர் விருது பெறுகின்றனர். 13 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 
 பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் நாளை மாலையில் நடக்கும் ராஜ்யோத்சவா விழாவில், விருது பெறுவோருக்கு 25 கிராம் தங்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். கர்நாடக அரசின் உயரிய விருதான 'கர்நாடக ரத்னா' விருது பெற்றவர்களை கவுரவிக்க, தனி நிகழ்ச்சி நடத்தப்படும். 
 இவ்வாறு அவர் கூறினார். 
 விருது பட்டியல் உள்ளே... 
மேலும்
-     
          அற்ப அரசியலை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-     
          'எங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?'; அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி மாணவி சரமாரி கேள்வி
-     
          "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
-     
          ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் கைது
-     
          அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு
-     
          இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய பிரிட்டன் மன்னர் சார்லஸ் உத்தரவு


 
  
  
 


