இந்தியாவின் 90வது செஸ் கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதி: தமிழக மாணவர் சாதனை
 
    சென்னை: இந்தியாவின் 90வது மற்றும் தமிழகத்தின் 35வது  செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை சென்னயைச் சேர்ந்த  இளம்பரிதி  (16)  என்ற மாணவருக்கு கிடைத்துள்ளது.
சென்னையில் 2009ல் பிறந்த இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். செஸ் மீது  இளம் வயதில் இருந்தே அவருக்கு ஆர்வம் அதிகம்.  இதனயைடுத்து ஷியாம் சுந்தர் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார். 
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த செஸ் போட்டியில் இவர் இளம்பரிதி பட்டம் வென்றார். மேலும் இப்போட்டியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான 2500 elo புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் இளம்பரிதிக்கு இந்தியாவின் 90வது மற்றும் தமிழகத்தின் 35வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்து கிடைத்தது.
செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற இளம்பரிதிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்து
முதல்வர் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்தின் சாம்பியன் கிரீடத்துக்கு மற்றொரு மணிமகுடத்தை சேர்த்துள்ளார். தமிழகத்தில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருனானார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது
இந்தியா மற்றும் தமிழகத்தின் செஸ்  போட்டிகளில் மற்றொரு மைல்கல் மற்றும் பெருமைமிக்க தருணம்.  இந்தியாவின் 90வது தமிழகத்தின் 35வது கிராண்ட் மாஸ்டர் ஆன இளம்பரிதிக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால செஸ் பயணம் தொடர்ந்து வெற்ற பெறவும், இன்னும் பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில்  உதயநிதி கூறியுள்ளார்.
 இளம்பரிதிக்கு வாழ்த்துக்கள்.
  இளம்பரிதிக்கு வாழ்த்துக்கள். தமிழக குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது பாராட்டுக்குரியது. 
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கும் நன்றி.
  தமிழக குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது பாராட்டுக்குரியது. 
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கும் நன்றி. இதிலும் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்படும்
  இதிலும் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்படும் நெற்றியில் விபூதி. கட்டுமர திருட்டு திமுக வேண்டா வெறுப்பாக வாழ்த்து சொல்லும். இல்லனா மதம் மாற்றும் கும்பலும் மூர்க்க கும்பலும் கோபம் கொள்ளுமே.
  நெற்றியில் விபூதி. கட்டுமர திருட்டு திமுக வேண்டா வெறுப்பாக வாழ்த்து சொல்லும். இல்லனா மதம் மாற்றும் கும்பலும் மூர்க்க கும்பலும் கோபம் கொள்ளுமே. வாழ்த்துக்கள் இளம்பரிதி
வாழ்த்துக்கள் இளம்பரிதிமேலும்
-     
          'எங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?'; அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி மாணவி சரமாரி கேள்வி
-     
          "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
-     
          ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் கைது
-     
          அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு
-     
          இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய பிரிட்டன் மன்னர் சார்லஸ் உத்தரவு
-     
          தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை


 
  
  
 


