அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு
 
 புதுடில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2,790 இந்தியர்கள் அங்கிருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். 
அந்த வகையில், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த இந்தியர்கள், மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரையில் 2,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளன. 
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இதுவரை 2,790 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 2,790 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாததால், சட்டவிரோத குடியிருப்பாளர்களாகக் கருதி நாடு கடத்தப்பட்டுள்ளனர். 
அதேபோல, இந்தாண்டில் மட்டும் பிரிட்டனில் இருந்து 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.
 
 மிச்சம் இருக்கிற இருபது லட்சம் பேரையும் எப்போ அனுப்பி வைப்பிங்க
  மிச்சம் இருக்கிற இருபது லட்சம் பேரையும் எப்போ அனுப்பி வைப்பிங்க விரும்பாத வீட்டுக்கு விருந்தினராக போகலாமா? வலுக்கட்டாயமாக போயி, இப்படி அவமானப்படவேண்டுமா? இந்திய இளைஞர்களே சிந்தியுங்கள். இந்தியாவிலேயே சாதிக்க முயலுங்கள்.
  விரும்பாத வீட்டுக்கு விருந்தினராக போகலாமா? வலுக்கட்டாயமாக போயி, இப்படி அவமானப்படவேண்டுமா? இந்திய இளைஞர்களே சிந்தியுங்கள். இந்தியாவிலேயே சாதிக்க முயலுங்கள். வாங்க, வந்து இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இங்கேயே தங்கி வேலை செய்யுங்க, அல்லது தொழில் துவங்குங்க. இங்க படித்துவிட்டு, அயல் நாட்டில் வேலை செய்து அவர்கள் நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்வது நியாயமா?
  வாங்க, வந்து இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இங்கேயே தங்கி வேலை செய்யுங்க, அல்லது தொழில் துவங்குங்க. இங்க படித்துவிட்டு, அயல் நாட்டில் வேலை செய்து அவர்கள் நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்வது நியாயமா?மேலும்
-     
          மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-     
          உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவம்பர் 6 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
-     
          ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
-     
          பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி; கட்டுமான பணியை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு
-     
          மெல்போர்ன் டி20 கிரிக்கெட்; இந்திய அணி தடுமாற்றம்
-     
          தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளை மீண்டும் கடுமையாக சாடிய சுப்ரீம் கோர்ட்!


 
  
  
 


