இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய பிரிட்டன் மன்னர் சார்லஸ் உத்தரவு
 
  
லண்டன்: பிரிட்டனின் மன்னர் சார்லஸ் தனது தம்பி இளவரசர்  ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். மேலும் அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா பெண் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூ, 'அரச பட்டங்களை துறக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, பொது வாழ்க்கையில் இருந்து விலகவும் முடிவு செய்து உள்ளேன், என்றார்.
இந்நிலையில் தனது தம்பி இளவரசர்  ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை மன்னர் சார்லஸ் தொடங்கி உள்ளார்.  மேலும் அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்யவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இளவரசர் ஆண்ட்ரூவின் உடை, படங்கள் மற்றும் கவுரவங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ இப்போது ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார். அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் மாற்று தனியார் தங்குமிடத்திற்கு செல்வார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 ரொம்பதான் சீன போடுறானுங்க.
  ரொம்பதான் சீன போடுறானுங்க. கர்மா
  கர்மா இந்தியாவின் வளங்களை சூறையாடியவர்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திதே தீருவார்கள். கர்மா.
  இந்தியாவின் வளங்களை சூறையாடியவர்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திதே தீருவார்கள். கர்மா. Even he should leave the Windsor le. He too cheated on his first wife Diana with his present wife
  Even he should leave the Windsor le. He too cheated on his first wife Diana with his present wife ஊற கொள்ளை அடித்து உலையில் போட்ட கும்பல். பரந்த பாரதத்தை கொள்ளை அடித்த கும்பல். லண்டனை நமது கோயில் நகைகளை உருக்கி திருடி சென்று கட்டிய கும்பல். இளவரசர் என்ற பட்டம் வேற
  ஊற கொள்ளை அடித்து உலையில் போட்ட கும்பல். பரந்த பாரதத்தை கொள்ளை அடித்த கும்பல். லண்டனை நமது கோயில் நகைகளை உருக்கி திருடி சென்று கட்டிய கும்பல். இளவரசர் என்ற பட்டம் வேற மௌன்ட்பேட்டேன் என்ற பேரைக் கேட்டாலே ... ஞாபகம் வருதே
  மௌன்ட்பேட்டேன் என்ற பேரைக் கேட்டாலே ... ஞாபகம் வருதேமேலும்
-     
          மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-     
          உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவம்பர் 6 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
-     
          ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
-     
          பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி; கட்டுமான பணியை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு
-     
          மெல்போர்ன் டி20 கிரிக்கெட்; இந்திய அணி தடுமாற்றம்
-     
          தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளை மீண்டும் கடுமையாக சாடிய சுப்ரீம் கோர்ட்!


 
  
  
 


