சென்னை ஓபன்: சஹாஜா தோல்வி

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் சஹாஜா தோல்வியடைந்தார்.

சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சஹாஜா, குரோஷியாவின் டோனா வேகிக் மோதினர். இதில் ஏமாற்றிய சஹாஜா 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா 1-6, 6-4, 7-6 என சகவீராங்கனை ஸ்டிரோம் ஹன்டரை தோற்கடித்தார். ரஷ்யாவின் போலினா இட்சென்கோ 6-2, 6-3 என போலந்தின் காவாவை வீழ்த்தினார்.

இரட்டையரில் அபாரம்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, மாயா ரேவதி ஜோடி 6-2, 1-6, 10-7 என, பிரிட்டனின் அமினா அன்ஷ்பா, ஈடன் சில்வா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரியா பாட்யா, ருதுஜா போசலே ஜோடி 6-2, 6-2 என சுலோவேனியாவின் தலிலா ஜகுபோவிச், நிகா ராடிசிக் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அன்கிதா ரெய்னா ஜோடி 6-7, 2-6 என ஜப்பானின் மாய் ஹான்டமா, அகிகோ ஒமே ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, நெதர்லாந்தின் அரியன்னே ஹர்டோனோ ஜோடி 3-6, 6-7 என, ஜப்பானின் ஹிரோகோ குவாடா, தாய்லாந்தின் நக்லோ ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement