உடல்நிலை முன்னேற்றம்: ஷ்ரேயஸ் உருக்கம்
 
 சிட்னி: ''ஒவ்வொரு நாளும் எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது,''என ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
 
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் (அக். 25) இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் 'கேட்ச்' பிடித்த போது இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'ஸ்கேன்' பரிசோதனையில் இவரது மண்ணீரலில் ரத்தக்சிவு கண்டறியப்பட்டது. நவீன அறுவை சிகிச்சை முறையில் ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. முழுமையாக குணமடைய 2 மாதம் தேவைப்படலாம்.
 
இது பற்றி இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில்,'ஷ்ரேயசின் மண்ணீரலில் ரத்தக்சிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. இவருக்கு மீண்டும் 'ஸ்கேன்' பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைதளத்தில் ஷ்ரேயஸ் ஐயர் வெளியிட்ட செய்தியில்,'தற்போது விரைவாக தேறி வருகிறேன். ஒவ்வொரு நாளும் உடல்நிலையில் சிறப்பான முன்னேற்றம் தெரிகிறது. நான் குணமடைய பிரார்த்தித்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் எண்ணங்களில் என்னை நினைவில் வைத்ததற்கு நன்றி,' என தெரிவித்துள்ளார். 
மேலும்
-     
          'எங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?'; அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி மாணவி சரமாரி கேள்வி
-     
          "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
-     
          ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் கைது
-     
          அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு
-     
          இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய பிரிட்டன் மன்னர் சார்லஸ் உத்தரவு
-     
          தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை


 
  
  
 


