அற்ப அரசியலை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
 
  
சென்னை: தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உழைக்கும் பீஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை.
தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி ராஜா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீஹார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியிலேயே, பிரதமர் மோடி, தமிழகத்தில், பீஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.
எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, ஸ்டாலின் வகிக்கும் முதல்வர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
 வாசகர் கருத்து (60)
         
        திகழ்ஓவியன்   - AJAX  ONTARIO,இந்தியா          
 
         31 அக்,2025 - 14:36 Report Abuse
       தனிப்பட்ட திறமை இருக்கு என்றால் ஏன் மக்கள் நிராகரிக்கணும்
  தனிப்பட்ட திறமை இருக்கு என்றால் ஏன் மக்கள் நிராகரிக்கணும்  0
0 
        Reply 
      
     Kulandai kannan    - ,          
 
         31 அக்,2025 - 14:28 Report Abuse
       தன் கட்சிக்காரர்களின் வாயை அடைக்கும் துப்பு இல்லாதவர். இப்போது பேசி என்ன பலன்?
  தன் கட்சிக்காரர்களின் வாயை அடைக்கும் துப்பு இல்லாதவர். இப்போது பேசி என்ன பலன்?  0
0 
        Reply 
      
     Sridhar   - Jakarta,இந்தியா          
 
         31 அக்,2025 - 14:24 Report Abuse
       நாங்களே அற்பர்கள்தானே? அப்புறம் எங்க அரசியல் மட்டும் வேற மாதிரியா இருக்கும்?
  நாங்களே அற்பர்கள்தானே? அப்புறம் எங்க அரசியல் மட்டும் வேற மாதிரியா இருக்கும்?  0
0 
        Reply 
      
     Chandru   - ,இந்தியா          
 
         31 அக்,2025 - 14:07 Report Abuse
       அற்பத்தனமான அரசியல் தான் செய்யமுடியும்
  அற்பத்தனமான அரசியல் தான் செய்யமுடியும்  0
0 
        Reply 
      
     Barakat Ali   - Medan,இந்தியா          
 
         31 அக்,2025 - 13:57 Report Abuse
       அற்ப அரசியலில் உதித்து, அற்ப அரசியலில் வளர்ந்த கட்சி திமுக ..... திடீர்ன்னு நிறுத்தச் சொன்னா எப்படி ????
  அற்ப அரசியலில் உதித்து, அற்ப அரசியலில் வளர்ந்த கட்சி திமுக ..... திடீர்ன்னு நிறுத்தச் சொன்னா எப்படி ????  0
0 
        Reply 
      
     MP.K   - Tamil Nadu,இந்தியா          
 
         31 அக்,2025 - 13:47 Report Abuse
       பிஹாரில் இருந்து வேலைக்கு இங்கே தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வருகிறார்கள் வந்த இடத்தில சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது காவல்துறை வேடிக்கை பார்க்குமா என்ன ?
  பிஹாரில் இருந்து வேலைக்கு இங்கே தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வருகிறார்கள் வந்த இடத்தில சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது காவல்துறை வேடிக்கை பார்க்குமா என்ன ?  0
0 
        Reply 
      
     திகழ்ஓவியன்   - AJAX  ONTARIO,இந்தியா          
 
         31 அக்,2025 - 13:28 Report Abuse
       தமிழ்நாடு இந்திய மக்களை வரவேற்கிறது வாழ வைக்கும் இரயில் நிலையம் சாட்சி
  தமிழ்நாடு இந்திய மக்களை வரவேற்கிறது வாழ வைக்கும் இரயில் நிலையம் சாட்சி  0
0 
        Reply 
      
     திகழ்ஓவியன்   - AJAX  ONTARIO,இந்தியா          
 
         31 அக்,2025 - 13:21 Report Abuse
       எந்த மாநிலமும் நெருங்க முடியா வளர்ச்சி
  எந்த மாநிலமும் நெருங்க முடியா வளர்ச்சி  0
0 
       kjpkh  - ,இந்தியா  
        
        
         31 அக்,2025 - 14:31Report Abuse
        
       நீங்களே மெச்சிக் கொள்ள வேண்டியதுதான். வெளியில் வந்து பாருங்கள். திமுக ஆட்சியைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று. கடன் வாங்குவதில் இந்தியாவில் தமிழகத்தை எந்த மாநிலமும் மிஞ்ச முடியாது. மொத்தத்தில் வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனதல்ல என்று உறுதி பட மக்கள் கூறுகின்றனர்.
நீங்களே மெச்சிக் கொள்ள வேண்டியதுதான். வெளியில் வந்து பாருங்கள். திமுக ஆட்சியைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று. கடன் வாங்குவதில் இந்தியாவில் தமிழகத்தை எந்த மாநிலமும் மிஞ்ச முடியாது. மொத்தத்தில் வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனதல்ல என்று உறுதி பட மக்கள் கூறுகின்றனர்.  0
0 
      
        Reply 
      
     திகழ்ஓவியன்   - AJAX  ONTARIO,இந்தியா          
 
         31 அக்,2025 - 13:14 Report Abuse
       888 என்று கணக்கு எப்படி வந்தது ED சொல்லிசா
  888 என்று கணக்கு எப்படி வந்தது ED சொல்லிசா  0
0 
        Reply 
      
     திகழ்ஓவியன்   - AJAX  ONTARIO,இந்தியா          
 
         31 அக்,2025 - 12:55 Report Abuse
       சரி அண்ணாமலை 888 மூன்று 8 கதை என்ன ஆச்சு , பாவம் நீங்க சொல்லி எந்த ஒரு விசயமாவது நிரூபணம் ஆகி இருக்கா அப்புறம் எப்படி உங்கபேச்சை மதிப்பார்கள் , இப்போ உங்க கட்சி காரனே உங்கள மதிப்பதில்லை
  சரி அண்ணாமலை 888 மூன்று 8 கதை என்ன ஆச்சு , பாவம் நீங்க சொல்லி எந்த ஒரு விசயமாவது நிரூபணம் ஆகி இருக்கா அப்புறம் எப்படி உங்கபேச்சை மதிப்பார்கள் , இப்போ உங்க கட்சி காரனே உங்கள மதிப்பதில்லை  0
0 
       Kumar Kumzi  - ,இந்தியா  
        
        
         31 அக்,2025 - 13:11Report Abuse
        
       இதை விட சிறந்த கொத்தடிமை துண்டுசீட்டு கோமாளிக்கு கிடைக்காது
இதை விட சிறந்த கொத்தடிமை துண்டுசீட்டு கோமாளிக்கு கிடைக்காது  0
0 
      
       தெய்வேந்திரன்,சத்திரக்குடி இராமநாதபுரம்  - ,  
        
        
         31 அக்,2025 - 13:16Report Abuse
        
       இன்னவரைக்கும் ஒன்னையத்தான் காணோம்னு தேடிக்கிட்டு இருந்தோம்
இன்னவரைக்கும் ஒன்னையத்தான் காணோம்னு தேடிக்கிட்டு இருந்தோம்  0
0 
      
       SUBRAMANIAN P  - chennai,இந்தியா  
        
        
         31 அக்,2025 - 13:42Report Abuse
        
       திமுக பேனர் கீழே விழாம முட்டுகுடுத்தில உம்மையும் பார்த்தேன். நல்ல பிழைப்பு..
திமுக பேனர் கீழே விழாம முட்டுகுடுத்தில உம்மையும் பார்த்தேன். நல்ல பிழைப்பு..  0
0 
      
        Reply 
      
    மேலும் 46 கருத்துக்கள்...
மேலும்
-     
          கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
-     
          சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக முதல்வர் செயல்படுகிறார்: அண்ணாமலை
-     
          தமிழகத்தில் வெறுப்பு அரசியலை வளர்க்கும் திமுக: மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு
-     
          மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-     
          உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவம்பர் 6 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
-     
          ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Advertisement
 Advertisement
 

 
  
  
 


