உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவம்பர் 6 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
 
  
சென்னை: வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகத்தில் இன்று (அக் 31) முதல் நவம்பர் 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக் 31) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, வடக்கு-வடகிழக்கு திசையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக குஜராத் கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று (அக் 31) முதல் நவம்பர் 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 இயற்கையை கணிக்க இறைவனால் மட்டும் முடியும்.....
  இயற்கையை கணிக்க இறைவனால் மட்டும் முடியும்..... Get out IMD. we dont want an organisation that s always give wrong fores. Its all absurd and I indent sending a letter under the provisions of RTI Act
  Get out IMD. we dont want an organisation that s always give wrong fores. Its all absurd and I indent sending a letter under the provisions of RTI Act வரும் ஆனா.....
  வரும் ஆனா.....மேலும்
-     
          48 பதக்கம் குவித்த இந்தியா * ஆசிய யூத் விளையாட்டில் முதன் முறையாக...
-     
          டில்லி அணி சாம்பியன்: புரோ கபடி லீக் தொடரில்
-     
          ஜிஎஸ்டி சீரமைப்பு: யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிப்பு
-     
          உலக விளையாட்டு செய்திகள்
-     
          ஜோனா, ஜானிஸ் கலக்கல்: சென்னை ஓபன் டென்னிசில்
-     
          தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்


 
  
  
 


