ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

2

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


அதன் விபரம் பின்வருமாறு:

* கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் செயலாளராக இருந்த கண்ணன் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


* கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக இருந்த அம்ரித், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக நியமனம்.


* தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பொது மேலாளராக இருந்த கவிதா, பால் கூட்டுறவு இணைய இணை மேலாண் இயக்குனர் ஆக நியமனம்.


* தமிழக பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இணை இயக்குநர் ஆக இருந்த முத்துக்குமரன், பேரிடர் மேலாண்மை முகமை இயக்குனர் ஆக நியமனம்.



* தமிழக மாநில தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பொது மேலாளர் ஆக இருந்த, லீலா அலெக்ஸ், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் ஆக நியமனம்.


* ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்தின் ஆணையராக இருந்த டாக்டர் மு.வீரப்பன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆக நியமனம்.


* தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஆக இருந்த ரேவதி, உயர்கல்வித்துறை துணை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Advertisement