கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
மதுரை: '' கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது,'' என ஐகோர்ட் மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''கரூர் வெண்ணைமலை பாலசுபரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடம் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' எனக்கூறியிருந்தார்.
இதனை நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு விசாரித்தது
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,'' பல ஆண்டுகளாக இதேபோன்ற பதிலைத் தான் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வழக்கில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா ரத்து யெ்து இருந்தாலும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பட்டா ரத்து செய்து இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் எந்தவிதமான தடையும் இல்லை. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும், அச்சுறுத்தலாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தயக்கம் கொள்ளாது. கோவில் சொத்துகளை உடனடியாக மீட்க வேண்டும். கரூர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகாரிகள் பணி செய்ய தவறினால், களத்திற்கு வந்து ஆய்வு செய்ய நேரிடும்,'' என உத்தரவிட்டனர்.
மேல் நடவடிக்கை இருக்குமா.
சேகர் பாபு இதுவரை 3000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. ஆனால் இதுவரை அது யாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்று சொல்லவே இல்லை
2 ஏக்கர் கோவில் நிலத்தை பாஜக நிர்வாகியிடம் பறிமுதல் செய்ய பட்டது என்று மட்டும் சொன்னார்கள்.
நீதிமன்ற கட்டுப்பாட்டில் ஒரு நவீன காவல்துறை இருந்தால் மட்டும்தான் நம்ம இந்தியாவுல குற்றவாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பயம் வரும். நாடும் உருப்பட வாய்ப்பு இருக்கு.
ஆக்கிரமித்து உள்ளவன் அத்தனை பேரும் dmk களவாணிகள் தான் பின்னர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் dmk விசுவாச அதிகாரிகள்
இதுவரை அறநிலையத்துறை மீட்ட எல்லா ஆக்கிரமிப்பு இடங்களையும் அதுவரை ஆக்கிரமித்தது யார் யார் என்பதையே வெளியிடவில்லை. சில ஆலய நிலங்களில் மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களைக் கூட கட்டிவிட்டனர் அவற்றின் மீது கை வைக்கவே மாட்டார்கள்.
வெளிப்படையான குற்றங்கள் மீது நீதிபதி பதவிக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அதிகாரம் பெற்றது. நில ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஒரு பொருளாதார குற்றம். எச்சரிக்கை அவ்வளவு பயன் தராது. இந்து அறநிலைய துறை கோவில் சொத்து பாதுகாக்க கடமை பட்டது. பட்டா வழங்க வருவாய் துறை. பட்டா விவரம் பெற்று, பிற துறைகள் தான் அரசு, கோவில் சொத்துகள் பாதுகாக்க வேண்டும் . அதற்கு நிதி பெற முடியும்.
இது என்னடா வந்த வம்படி வழக்கு. ?
ஒன்னும் நடக்காதுமேலும்
-
50 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் நால்வர் கைது
-
20 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
-
பாரதிய வித்யா பவனில் நாட்டிய விழா துவக்கம்
-
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
-
பனை விதை நடும் பணி
-
சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்