மெக்சிகோவில் சோகம்; சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.
மெக்சிகோவின் சோனோராவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உதவ, உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம், சோனோரா மாநில கவர்னர் அல்போன்சோ இரங்கல் தெரிவித்தனர். திடீரென
தீப்பற்றியதுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
நம்மூர் கட்சி காரங்க ஒடுங்க சிபிஐ விசாரணை கேளுங்க
ஆழ்ந்த இரங்கல்கள்மேலும்
-
தெலுங்கானாவில் அரசு பஸ்- லாரி மோதி விபத்து; 17 பேர் பரிதாப பலி
-
'முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிக்க பிடிக்கும்'
-
வறுமை இல்லாத மாநிலமாக மாற தமிழக அரசு என்ன செய்யணும்?
-
தமிழர்களிடம் தேசபக்தி வளர்ப்பது 'தினமலர்' நாளிதழ்
-
ஒடிசாவில் 60 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்; கடத்தல் கும்பல் தப்பியோட்டம்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு; 4 பேர் பலி