ஒடிசாவில் 60 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்; கடத்தல் கும்பல் தப்பியோட்டம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 60 கிலோ கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இழது தொடர்பாக மால்காங்கிரி மாவட்ட எஸ்பி வினோத் பாட்டில் கூறியதாவது; எஸ்ஸார் சவுக்கில் உள்ள சால மரக்காட்டு பகுதியில் கஞ்சா எண்ணெயை ஆந்திராவை சேர்ந்தவருக்கு விற்பதற்காக, பைக்குகளில் 8 பேர் கூடியிருப்பதாக நேற்று காலை 11 மணியளவில் சித்ரகொண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உடனடியாக போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
இதனைக் கண்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்த 8 பேர், அவர்களின் பைக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் இருந்த கஞ்சா எண்ணெய்களை விட்டு விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் விரட்டிச் சென்றும், அடர்ந்த காடுகளை பயன்படுத்தி அந்த கும்பல் தப்பிவிட்டது.
இதையடுத்து, பைக்குகளும், கஞ்சா எண்ணெய்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய் 60 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அதிகளவு கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்வது இதுவே முதல்முறையாகும், இவ்வாறு அவர் கூறினார்.
கஞ்சா உற்பத்தையை அந்த மாநிலங்கள் கட்டுப்படுத்தானால் தான் போதை ஒழிப்பு சாத்தியம்!
தமிழகத்தில் இதுபோன்ற ரைடுகளை என்று தமிழக போலீஸ் நடத்தும்? என்று தமிழக கடத்தல் கும்பல் பிடிபடும்?மேலும்
-
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
-
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
-
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
-
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு
-
மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்
-
அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்