வறுமை இல்லாத மாநிலமாக மாற தமிழக அரசு என்ன செய்யணும்?
கேரள அரசு, தங்கள் மாநிலத்தை தீவிர வறுமை இல்லாத, மாநிலமாக அறிவித்துள்ளது. கேரளா போன்று வறுமை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற, தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? கோவை மக்கள் சிலரிடம் பேசினோம்.
'வேலை வாய்ப்பு முக்கியம்'
வறுமையை நிரந்தரமாக ஒழிக்க, வேலை வாய்ப்பு உருவாக்கம் முக்கியம். தமிழகத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மையங்களை, கிராமப்புறம் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கான ஸ்டார்ட் அப் வில்லேஜ் திட்டங்களை, மேலும் வலுப்படுத்த வேண்டும். - முத்துராமன் சுக்கிரவார்பேட்டை.
'கல்வியில் கவனம் தேவை'
கேரளா போல், தமிழகமும் மக்கள் பங்கேற்புடன் மாவட்ட, நகராட்சி திட்டங்களை உருவாக்கலாம். கல்வியை அடிப்படை உரிமையாக கருதிய கேரளா, எழுத்தறிவு மாநிலமாக திகழ்கிறது. அதேபோல், தமிழகத்தில் அரசு பள்ளி வசதிகள், ஆசிரியர் பயிற்சி, தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவு கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தல் அவசியம். -கிருஷ்ணதாஸ் ஜோதிபுரம்.
'போதையிலிருந்து மீளணும்'
தமிழகத்தில் லஞ்சம், லாவண்யம் அதிகம். எந்த வேலைக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் சமயத்தில் இலவசங்கள் வேறு. சம்பாதிக்கும் பணத்தை மதுக்கடைகளுக்கு வாரி கொடுக்கும் 'குடி'மகன்களால் குடும்பத்துக்கு கேடு ஏற்படுகிறது. பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். போதையில் இருந்து தமிழகம் மீண்டால் வறுமை தானாகவே ஒழிந்துவிடும். -அமர்குமார் காட்டூர்.
'ஹிந்தி கற்கணும்'
கேரள மக்கள் தாய் மொழி மீது பற்று கொண்டாலும், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளையும் கற்றுக்கொள்கின்றனர். மொழி அறிவால் வெளிநாடுகளுக்கு, வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர். தமிழகத்திலோ, மொழி அரசியல் நடக்கிறது. வேறு மொழி கற்க முடியாதவர்கள், வெளியூர் சென்று தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மொழி அரசியலை கைவிட வேண்டும். -சூரஜ் கணபதி.
'கிடைக்கும் ஊரில் வேலை'
கேரளாவில் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என, யாரும் வீட்டில் இருப்பதில்லை. கிடைக்கும் ஊருக்கு சென்று வேலை செய்கின்றனர். வெளிநாடுகளில் பலர் வேலை செய்கின்றனர். சம்பாதிக்கும் பணத்தை கேரளாவில்தான் முதலீடு செய்வார்கள். தமிழகத்தில் அரசு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால், கேரளா போல் மாறலாம். - நாகூர் மீரான் காட்டூர்.
'இலவசம் ஒழியணும்'
கேரளாவில் உள்ளவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள். மூன்று மொழி தெரியும். இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் வேலை கிடைக்கும். அங்கு வறுமைஇல்லாமைக்கு, மக்கள் தொகை குறைவாக இருப்பதும் ஒரு காரணம். தமிழகத்தில் வேலை இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர். தமிழக அரசு இலவசங்களை அதிகம் கொடுப்பதால், இங்கு வறுமை ஒழிய வாய்ப்பு இல்லை. - ராஜேந்திரன் வரதராஜபுரம்.
'இயற்கைக்கு முக்கியத்துவம்'
கேரள அரசு, இயற்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாமும் கொடுக்க வேண்டும். அரசு அலுவலக செயல்பாடுகள், திட்டங்களை டிஜிட்டல்மயமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் சரி; இலவசங்களை விட்டுவிட்டு மருத்துவம், கல்விக்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தினாலே வறுமை இருக்காது. -பெனால்டு மணியகாரம் பாளையம்.
உலகம் முழுதும் இம்மாநில மக்கள் இருக்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் பிடிக்கலைன்னாலும் மத்தவங்கள பிரிக்கணும்னா ஒண்ணா சேர்ற குணம் பலரிலுமுண்டு அவங்களுக்கு. ஒன்னும் தெரியலன்னாலும் தெரிஞ்ச மாதிரி வேலை செய்யும் மக்கள் பலரும். சொந்த ஊரில் வேலை செய்வதை விட மற்ற இடங்களில் வேலை செய்வதை பெருமையாக கருதுவர். தேங்காய் எண்ணெய் சமையலை கற்கலாம். லட்சங்கள் கொடுத்து அதிகம் படித்து சம்மந்தமே இல்லாத வேலை பார்ப்பதை நிறுத்தி சிறு வயதிலேயே வேலைக்கேத்த படிப்பை படிக்கலாம். ரப்பர் மரங்களை நடலாம். ஆத்து மீன்களை பெருக்கலாம்.
அரசியல் வாதிகள் இன்னும் அதிகமாக கொள்ளை அடிக்கணும்.
மேலே பலர் பலவிதமான கருத்துக்களை கூறி இருக்கின்றனர். அவை எல்லாம் சிறப்புதான். மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் ஊழல் என்பது முற்றிலும் ஒழியவேண்டும். எல்லா விஷயங்களிலும் ஆட்சியாளர்கள் தங்கள் பதவியை பயன்படுத்தி மூக்கை நுழைப்பதை தவிர்க்கவேண்டும். சிபாரிசு முறை முற்றிலும் இருக்கக்கூடாது. திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன தேவையோ அதை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துகொடுக்கவேண்டும்.
என்றென்றும் கட்டுமர வம்சத்துக்கு வாக்களித்து டாஸ்மாக்கில் ஒன்றி விட வேண்டும். வறுமை ஒழிந்து விடும்
ஊழலை ஒழித்தால் எல்லாம் சரியாகும்
௧.இலவசங்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.
௨. நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும்.
௩.கல்வியில் அரசியல் கூடாது.
காங்கிரஸ் திமுக அதிமுக கட்சி காரர்கள் சொத்து பறிமுதல் செய்து மக்களுக்கு கொடுக்கவும்.
Stalin should give similar message in the media
Corruption has to be eradicated.
கோடி கோடியாக வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றும் நபர்கள் வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்கிறார்கள்.வங்கிகள் ஏழைகளுக்கு தாரளமாக கடன் தந்தால் வறுமை ஒழிய லாம்.மேலும்
-
தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் ரிஷப் பன்ட்!
-
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
-
900 முறை பாங்காக் பயணித்த தொழிலதிபர்: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி
-
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வதில் யாருக்கு என்ன பயன்? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
இந்திய விமானப்படை சாகசத்தை கண்டு ரசித்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
-
பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டு: அண்ணாமலை காட்டம்