பீஹார் குளத்தில் மீன்பிடித்த ராகுல்: தேர்தல் பிரசாரத்தில் விறுவிறுப்பு
பாட்னா: பீஹாரில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து மீன்பிடித்து ஓட்டு சேகரித்தார்.
தீவிர பிரசாரம்
பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் ஆளும் தேஜ கூட்டணிக்கு ஆதரவாக தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


குளத்தில்
பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள குளம் ஒன்றில் மீனவர்கள் வலைபோட்டு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் பகுதிக்கு படகில் சென்ற ராகுல், திடீரென குளத்தில் குதித்தார். மீனவர்களுடன் சென்று வலையை பிடித்து மீன்பிடிக்க துவங்கினார். பிறகு அவர்களுடன் சேர்ந்து ராகுலும் மீன்களுடன் கரையேறினார். அவர்களுடன் துணை முதல்வர் வேட்பாளர் முகேஷ் சஹானி, மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர் கன்னையா குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
அனைவருக்குமான அரசு
முன்னதாக அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: 'ஆப்பரேஷன் சிந்தூரை நிறுத்த வேண்டும் என டிரம்ப் கூறியதும், பிரதமர் மோடி பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தினார். ஆனால், 1971ல் இந்திரா பிரதமராக இருந்த போது அமெரிக்கா மிரட்டிய போதும் பயப்படவில்லை.
சிறு வணிகர்கள் பாதிக்கப்படும் வகையிலும், பெரிய முதலாளிகள் லாபம் அடையும் வகையில் மட்டுமே, ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற நடவடிக்கைகளை பாஜ அரசு எடுத்தது.ஆனால், எங்களது அணுகுமுறை வேறு. சிறுவணிகர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மொபைல்போனில் உள்ள மேட் இன் சீனா என்ற வாசகம், மேட் இன் பீஹார் என மாற வேண்டும்.
இணைய கட்டணத்தை குறைத்துவிட்டோம். அதனால், சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பார்க்க முடிகிறது. ரீல்ஸ் எடுக்க முடிகிறது என மோடி கூறுகிறார். நீங்கள் ரீல்ஸ் பார்ப்பதால், பணம் அனைத்தும் கோடீஸ்வரர்களுக்கு செல்கிறது. 'இண்டி' கூட்டணி ஆட்சி அமைத்தால், நாங்கள் குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் அல்லாமல், அனைத்து தரப்புக்குமான அரசாக இருக்கும்.
இவ்வாறு ராகுல் பேசினார்.
கொளத்துல இறங்கி கும்மாளம் போட்டா ஈஸியா மீனு சிக்கும் ன்னு புரிஞ்சுக்கிட்டோம் ....
பீகாரிகள் ஏமாற மாட்டாங்க ..... அது என்ன டுமீல் நாடா ?
நல்ல வேலை, அந்த மீனவர்கள் சின்ன குளம், குட்டையில் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்தனர். கடலில் இல்லை.
10 நாளைக்கு முன்னாள் ஜீலேபி சுட்டார். இப்போது ஜீலேபி மீன் பிடிக்க போயுள்ளார்.
அடுத்த வருடம் தமிழ்நாட்டிற்கு வந்து கருப்பு எம் பி யோடு ஆம்பூர் பிரியாணி செய்வர் ஆனால் உ பி எஸ் களுக்கு தெரிந்தால் பிரியாணி அபேஸ்
எல்லா ஜோக்குகளும் இப்ப பீகாரில இருக்காக போல.
மக்கா பாத்து சூதானமா நடந்துக்கோக
நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்
இந்தியன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முஸ்லிமை தவிர்த்து மற்ற எல்லோரும் இந்த சிறு பிள்ளையை கழுவி கழுவி ஊற்றும்போதே தெரியவில்லையா ரவுல் வின்சியின் கேவலமான அருகதை
இங்கே மீன் பிடிப்பான் தேர்தல் தோல்விக்கு பின் மீன் சரி இல்லை என வெளிநாட்டுக்கு சென்று மோடி அவர்களையும் தாய் நாட்டையும் இழித்தும் பழித்தும் பேசுவான். அதற்க்கு இங்கே சில kothadimaigal முட்டு குடுப்பார்கள்
பாரா திகழ் எல்லாம் திருந்திட்ட எப்படி.....
அட பப்பு இப்படி கோமாளித்தனமாக ஏதாவது செய்தால் உமக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.... நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்தால் தான் உங்களை மனிதனாகவே மதிப்பார்கள்..... இல்லையென்றால்......
மத்யபிரதேசம் போனால் பூணூல் அணிந்த ப்ராஹ்மின் என்று நெற்றி பூரா விபூதி பூசிப்பார் . வேஷதாரி .மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் ; அண்ணாமலை ஆவேசம்
-
கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்
-
இளம் வயதில் கோடீஸ்வரர்கள்; மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளிய இந்திய வம்சாவளி நண்பர்கள்
-
அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
-
தெலுங்கானாவில் அரசு பஸ்- லாரி மோதி விபத்து; 20 பேர் பரிதாப பலி