'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது'
   கோவை:  எழுத்தாளர் பாலச்சந்திரன் எழுதிய, 'செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்' என்ற நுால் வெளியிட்டு விழா, சன்மார்க்க சங்க அரங்கில் நடந்தது. 
 நுாலை இ.கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட, தமிழ்நாடு சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் முகமது ரபி பெற்றுக்கொண்டார். 
 நுால் குறித்து, வீரபாண்டியன் பேசியதாவது: 
 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது அறிவியல் வளர்ச்சியின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது.இதன் வளர்ச்சியை நன்மை என்றும் சொல்லமுடியவில்லை. தீமை என்றும் சொல்ல முடியவில்லை. 
 இந்த நுாலின் தலைப்பில், 'உழைப்பின் எதிர்காலம்' என்ற கேள்வி இருக்கிறது. அறிவு சார்ந்து தொழில்களை செய்யும் தொழிலாளர்களும், உடல் உழைப்பை செய்யும் தொழிலாளர்களுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
 இத்தொழில்நுட்பம், இருபுறமும் கூர்மையாக உள்ள கத்தியை போல் இருப்பதால், கவனமாக பயன்படுத்த வேண்டும். 
 இவ்வாறு, அவர் பேசினார். 
 நிகழ்ச்சிக்கு, இன்ஜினியரிங் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நுாலாசிரியர் பாலச்சந்திரன் ஏற்புரையாற்றினார். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி, துணை செயலாளர் தங்கவேல், கவிஞர் கோவை காமு உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர். 
மேலும்
-     
        
 அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்
 -     
        
 குருநானக் தேவ் பிறந்தநாள் விழா: அட்டாரி-வாகா வழியாக பாகிஸ்தான் சென்றது முதல் குழு
 -     
        
 பிலிப்பைன்சை புரட்டி போட்ட கடும் சூறாவளி; 26 பேர் பலி
 -     
        
 நடக்கக்கூடாத கொடூரம்: கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்
 -     
        
 தவறுதலாக எல்லை கடந்த மூன்று மீனவர்கள் விடுதலை: படகுடன் பாதுகாப்பாக அனுப்ப இலங்கை நீதிமன்றம் உத்தரவு
 -     
        
 திமுகவில் துணை பொதுச் செயலாளர்கள் பதவி 7 ஆக உயர்வு: மாவட்ட பொறுப்பாளர் ஆனார் கதிர் ஆனந்த்