கஞ்சா விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

தொண்டாமுத்தூர்: பூலுவபட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்தனர்.

ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த செப்., மாதம், பூலுவபட்டி, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த, விஜய் என்ற விஜயராஜ், 32 என்பவர் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டார். ஆலாந்துறை போலீசார், விஜயராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், விஜயராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement