ஆர்.எஸ்.எஸ்., வரலாற்று குறிப்பு வழங்கல்

சிதம்பரம் : சிதம்பரத்தில், பா.ஜ., சார்பில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவு செய்ததையொட்டி, ஆர்.எஸ்.எஸ்., வரலாற்று குறிப்பேடு இல்லம் தோறும் வழங்கும் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.

சிதம்பரம் கீழ வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி பணியை பா,ஜ., வினர் துவங்கினர். நேற்று முதல், வரும் 23ம் தேதி வரை சிதம்பரம் நகர பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் வரலாற்று குறிப்புகள் வழங்கப்படுகிறது. துவக்க நிகச்சிக்கு நகர காரியவாக் மணிகண்டன், மாவட்ட குடும்ப பிரிவு பொறுப்பாளர் ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், பா.ஜ., கோபிநாத் கணேசன், குமார், சின்னிகிருஷ்ணன், செந்தமிழ்செல்வி ஆகியோர், முதற்கட்டமாக நேற்று சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 7, 8 மற்றும் 9 வது வார்டுகளில் வீடுதோறும் சென்று துண்டறிக்கை வழங்கினர்.

Advertisement