தவற விட்ட பணம்  உரியவரிடம் ஒப்படைப்பு 

கடலுார்: துணிக்கடையில் பெண் தவற விட்ட பணத்தை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி, பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரரகு மனைவி அனிதா. இவர், கடந்த 17ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்க கடலுார் வந்தார்.

துணிக்கடைக்கு சென்ற போது, பையில் வைத்திருந்த 10,500 ரூபாயை தவற விட்டார்.

இதுகுறித்து அவர், கடலுார், புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், குற்றப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, பணத்தை கண்டுபிடித்து அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

போலீசாருக்கு, அனிதா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Advertisement