செமஸ்டர் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் துணை தேர்வு
   சென்னை :  'அண்ணா பல்கலை வளாக கல்லுாரி மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள் துணைத்தேர்வு நடத்தப்படும்' என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. 
 அண்ணா பல்கலை வளாகத்தில் கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம், கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. 
 இந்த கல்லுாரிகளில் இம்மாதம் துவங்கும் செமஸ்டர் தேர்வுகள், டிசம்பரில் நிறைவடைகின்றன. அம்மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இவற்றில் தேர்ச்சி பெறாதவர்கள், மீண்டும் தேர்வெழுத ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். 
 அவர்கள் நலனை கருத்தில் வைத்து, தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள், துணைத்தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்தில் அவற்றை நடத்தி, உடனடியாக முடிவுகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. 
மேலும்
-     
        
 இது நடந்தால் நியூயார்க் நகரத்திற்கு நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்
 -     
        
 அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு
 -     
        
 குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்
 -     
        
 அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்
 -     
        
 கொடி கம்பங்கள் அகற்றும் உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் இ.கம்யூ., வழக்கு
 -     
        
 குடியுரிமை பறிபோகும் அபாயம்