அரசு பஸ் கண்டக்டர் காரில் சடலமாக மீட்பு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு பஸ் கண்டக்டரின் உடல் காரில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியைச் சேர்ந்தவர் பெரியநாயகசாமி மகன் ஜோசப் அந்தோணி ராஜ், 48; திருக்கோவிலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அவருக்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு அத்திப்பாக்கம் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி சம்யுக்தா, 43; மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், அத்திப்பாக்கம் அருகே சாலையோரம் கார் ஒன்று நிற்பதாகவும், அதில் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் அமர்ந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
உறவினர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, காரில் ஜோசப் அந்தோணி ராஜ் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. மணலுார்பேட்டை போலீசார் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது மனைவி சம்யுக்தா கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
இன படுகொலை நடக்கவில்லை அமெரிக்க மிரட்டலுக்கு பதிலடி
-
செமஸ்டர் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் துணை தேர்வு
-
அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு துவக்கம்
-
பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா? தேஜஸ்விக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி
-
கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுபிடித்த காவல்துறை
-
கேளுங்கள்...