இந்திய விமானப்படை சாகசத்தை கண்டு ரசித்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் இந்திய விமான படையின் சாகசத்தை துணை ஜனாதிபதி சிபி.ராதாகிருஷ்ணன் கண்டு ரசித்தார்.
சத்தீஸ்கரில் உள்ள ராஜ்பவனில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் முதல்வர் விஷ்ணு தியோ சாயை சந்தித்து பேசினார். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து விஷ்ணு தியோ சாய் வாழ்த்து தெரிவித்தார்.
கண்டு ரசித்த சிபிஆர்!
நவ ராய்ப்பூரில் இந்திய விமானப்படையின், புகழ்பெற்ற சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு நடத்திய விமான சாகசத்தை மக்களுடன் இணைந்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் கண்டு ரசித்தார்.
அப்போது அவருடன் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், சபாநாயகர் ராமன் சிங் மற்றும் கவர்னர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சக்தி வாய்ந்தவை
சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானில் இன்று நடந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களின் வலிமை, கண்ணியம் மிகவும் சக்தி வாய்ந்தவை. பெண்கள் செழிக்கும்போது, குடும்பங்கள் செழிக்கும்போது, நாடு செழிக்கும்.
தன்னம்பிக்கை
தொழில் முனைவோர் தலைமைத்துவம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றில் சத்தீஸ்கர் முழுவதும் பெண்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
அத்தகைய முயற்சிகள் கிராமப்புற வாழ்வாதாரங்களை மாற்றுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
தர்மத்தின் குரல் என்றும் ஒலிக்கட்டும்!
-
வெற்றி தொடருமா? ஆஸி.,க்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்
-
மாணவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் ஒளிவிளக்கு 'தினமலர்'
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: நவ.14ல் ஆஜராக அனில் அம்பானிக்கு ஈ.டி., நோட்டீஸ்
-
தன்னை முன்னிலைப்படுத்தி நிற்கிறது 'தினமலர்' நாளிதழ்
-
ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு