ரஷ்யாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
மாஸ்கோ: ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 24 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நிலநடுக்க பாதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சுனாமி எச்சரிக்கைகள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம், பசிபிக் பெரும்பகுதியைச் சுற்றியுள்ள நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம் போன்றவை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரம்ப் குற்றச்சாட்டை குற்றச்சாட்டை நிராகரித்தது நைஜீரியா
-
வெளிநாடுகளுக்கு அணுசக்தி தகவல்களை விற்ற போலி விஞ்ஞானி மஹாராஷ்டிராவில் கைது
-
அந்தமானுக்கு புயல் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
தி.மு.க., தொடர் வெற்றி பெற்றதில்லை: நயினார் நாகேந்திரன்
-
ஊழல் நிறைந்த தலைவருக்கு ஓட்டளிக்காதீங்க: பிரசாந்த் கிஷோர் பேச்சு
-
தேஜஸ்வி இந்த முறை எப்படியும் பீஹார் முதல்வராகி விடுவார்: லாலு நம்பிக்கை
Advertisement
Advertisement